வரிசையோ வரிசை

வரிசையில் நிற்க்கும்
நாகரிகம் நல்லதுதான்!

காலைகடன் முடிக்க
கழிவறையில் தொடங்கிய வரிசை!

குழாயடியில் குடுமிபுடி!

ரேசன்கடையில் அடிதடி!

மருத்துவமனையில் நொந்து!

வங்கி வழக்காடி!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
வியர்வை சிந்தி!


வாழ்க்கை வெறுத்து
விஷத்தை குடித்து
இறந்தே போனான் ஒருவன் !

அங்கே பிணவறையில் வரிசை...!

வரிசையோ வரிசை!

எழுதியவர் : கோடீஸ்வரன் (3-Nov-13, 4:38 pm)
பார்வை : 61

மேலே