இன்றைய கூலி,,,,,
இன்று கூலி ,,,,,,,
நேற்றுவரையான எனது வியர்வைக்கு
நாளை மணம் பூசலாம்
கூவியே வருகிறது கூலி இன்று எல்லோரும் விழித்துக்கொண்டனர்
விரும்பியதை உணரவோ விரும்பாததை மறுதலிக்கவோ
எனது கூலிக்கு சக்தி இல்லை.
போதை தலைக்கேறியபடியே என் கையில் வந்தமரும்
முக்கால் மணிநேரம் முடிந்தவுடன்
போதை தெளிந்து கையிலிருந்து நழுவி எனைப்பிரியும் ,,,,,,,
நிறையவே உளறும் என் கூலி ,...
அதிகமாய் தடுமாறும் ஒரு மனம் இன்றி
தாளா மனதுடன் தள்ளாடியே சென்று விடும்
இரவோடு இரவாக எனைப்பிரிந்து
அது என் கூலி