தாய்மை - இறைவன் அளித்த பாக்கியம்

யாமிருவர் வணங்க
இறைவன் வாழ்த்த
இணைந்த வாழ்வில்,
இவள் கருவறையில்
மக்கள் இருவர்
மலர்கின்றனர் நலமே!

மகிழும் தாய்மை
நெகிழும் தருணம்
கண்ணவ ளருகில்
மன்னவன் நிற்க,
மலர்ந்த கண்களால்
தேன்குழைந்து பேசுவாள்....

அவளோ, அவனோ
கருவறையில் துள்ளலில்
ஆ...னந்தம் கொள்கிறாள்;
அருகில் எனையும்
நொடியி லழைத்து
கை வயிற்றிலணைத்து
புன்முறுவல் செய்கிறாள்....

மலர்ந்த மேனியில்
மன்னவன் கைதொட
தவழும் மக்கள்இருவர்
தகப்பன் கைபட,
பாய்ந்த அலைகளில்
பரவசம் கண்டேன்....
இறைவன் எமக்களித்த
பாக்கியம் என்றேன்.

யாமிருவர் வணங்க
இறைவன் வாழ்த்த
இணைந்த வாழ்வில்,
இவள் கருவறையில்
மக்கள் இருவர்
மலர்கின்றனர் நலமே!

- A. பிரேம் குமார் & சுமதி

எழுதியவர் : A. பிரேம் குமார் (4-Nov-13, 3:12 am)
பார்வை : 94

மேலே