ஒவ்வாத கனவு
ஒவ்வொரு
இரவும் விடிகிறது
ஒவ்வொரு
விடியலும் மடிகிறது
விடிதலும் மடிதலும்
விதி என்றும்
வினை என்றும்...
மடிந்தவன்
விடியலாய் .....
வாழ்பவன்
மடிந்ததாய் ....
மௌனம் கதறி
சிதறும்
கண்ணாடி துண்டுகளாய்.....
யோசித்த கணத்தில்
தாகமாய் தத்தளிக்கும்
சிறு காகத்தின் பார்வையில்
பெரும் மழையை
வேண்டி அழும்
முதிர்கன்னியின் பாதங்களில்
பயணித்து விம்முகிறது
ஒவ்வொரு வயதும்
ஒவ்வாத கனவும்....
தொடர்பற்ற சிந்தனையில்
தொக்கி நிற்கும்
வானவில்லை
உடைத்து விடவே
எண்ணுகிறது,
விடியலைக் கொல்லும்
மடிதல் அல்லது
மடிதல் விரும்பாத
விடியல்.....