கண்தானம்

கண்தானம்
============================ருத்ரா

அவனுக்கு விழியில்லை.
இவனுக்கு உயிரில்லை.
மானிட நேச சமன்பாடு.

"ரீ சைக்கிள்" தான்.
இறைவன் சேகரிக்கும்
குப்பை இது.

விழிகளின் பாங்கில்
வட்டி வீதம்..ஒளிக்கு
நூறு சதவீதம்.

"கவச குண்டலம்"அல்ல
கண்ணே காணும்
விழிமண்டல தானம்

யார் சொன்னது ஆத்மாவுக்கு
உடல் இல்லை என்று?
"கண்ணே" அதன் கையெழுத்து.

==================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (4-Nov-13, 10:49 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 34

மேலே