அம்மாவின் அன்பின் மொழி
அன்பு என்று சொன்ன அடுத்த நொடியே நம் அனைவரின் நெஞ்சினில் வந்து நிற்கும் ஒரு விசையே அம்மா ...........
கருவறையில் கூட என் நிறத்தையும் , குணத்தையும் பாராமல் என்னை உயிரை நேசித்த ஓர் உயிர் என் உயிர் அம்மா ...........
காதலை பற்றி எழுத எனக்கு ஒரு காகிதமும் ,சில பொய்களும் போதும், ஆனால் என்னை ஈன்ற என் அன்னையை பற்றி எழுத எனக்கு உலகத்தில் படைக்கப்பட்ட எந்த எழுத்துகளும் போதாமல் தான் உள்ளது ............................
கை ஏந்துபவன் கூட உன் அன்பிற்காக தான் ஏங்குகிறான் போல ,,,,,"அம்மா " என்று ...........
இறைவனும் ஈரேழு பிறவி வேண்டும் என்பான் ,,, ஈன்றது என் தாயாக இருந்த்திருந்தால் ............
இறுதியாக அன்னையை நேசிக்கும் அன்புள்ளம் கொண்ட உள்ளங்களுக்கு , அன்புள்ள தோழனாக நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவெனில் ,,,,
" உன் மீது அன்பு கொண்ட அனைத்து உள்ளங்களும் உனக்கு அன்னைகள் தான் ,,,அவை அனைத்தும் உன் தொப்புள் கொடியில் தொடங்கியவை அல்ல , உன் வெற்றிக்கொடியை நட வந்தவை .............
இறுதியாக ,
" முதலில் உன்னை பெற்றவளை நேசி ,
பிறகு மற்றவளை நேசிக்கலாம் "......................
அழியாத அன்புடன் ,
அ.அன்சர் பாஷா
(your simple friend )