யார் கோழை

மனித ஜென்மத்தின்
மகத்தான துன்பம் மரணம்!

மரணத்தைக் கண்டு
பயபடாத நானா கோழை?

மானம் இழப்பதா?
மரணம் தழுவுவதா?

மானத்திற்கும்
வீரத்திற்கும்
உதாரணமாய்
வாழ்ந்தது எங்கள் மரபு!

போரிலே புறமுதுகு
காட்டியவன் கோழை!
நெஞ்சை நிமிர்த்தி
தோற்றவன் வீரன்!

என்னுடைய மரணம்
எவனுடைய கையிலும் இல்லை!
அது என் கையில்
இவனோ மாவீரன்!

உலகையே உலுக்கிய ஹிட்லர்
தன்மானம் பெரிதென்று
தன்னையே சுட்டானே
இவனா கோழை?

அற்ப வாழ்வின் மேல்
ஆசை பட்டு !

அழிந்து போகும்
செல்வத்தின் மீது
மோகபட்டு!

தன்மானம் இழந்து !
தகுதி இழந்து!
வாழ்க்கையின்
பகுதி விகுதி கெட்டு
இரட்டைக் கிளவியாய்
வாழும் நீங்கள் கோழை!

இது விரக்தியின்
வேகம் இல்லை!

வாழ்க்கையை நேசிப்பது!
பூஜிப்பது அல்ல!

வாழ்க்கையின் ஒவ்வொரு
நொடிதுகளும் பொன்னானது!
புனிதமானது! புதுமையானது!

எது வரைக்கும் ?

தன்மானம்
தலைமுடியளவும்
குறையாத வரைக்கும் !

மானம் இழந்து !
மரியாதை குறைந்து !
வாழும் மணித்துளி ஒவ்வொன்றும்
புண்ணானது! புரையானது!
வேதனையானது! வெட்கமானது!

உப்பின் உணர்ச்சியை
மதிக்காத உங்களோடு
வாழ்வதே அவமானம்!
சீ...! சீ ...!

இதோ என்னை சுட்டுகொள்கிறேன்!
டுமில் .. டுமில்...!

* * *

படகென்று கண்விழித்து
பார்த்தேன் !
அட அடடா கனவு!

பொறுமை வேண்டும்
அப்போதுதான்
உனக்கு பெருமை!

நாட்காட்டி காட்டியது!
* * *

எழுதியவர் : கோடீஸ்வரன் (5-Nov-13, 7:37 pm)
பார்வை : 199

மேலே