படிக்கிறேன் நானும் துடிக்கிறேன்

பள்ளிக்கூடம் போயி நானும்
பாங்காத்தான் படிக்கிறேன்
அதுக்காக பலபாடு பட்டுக்குறன்

அஆஇஈ அழகா சொல்லிதந்த
தாய்மொழின்னு என்பாட்டி தவறியும்
நா பேசிபுட்டா கட்டிடனும் அபராதம்

பறந்து விரிந்த உலகத்துல முழு
உலகத்தையும் புத்தகத்துல படிக்குறன்
மனசு வெறுத்து உள்ளுக்குள்ள தவிக்குரன்

விரும்பாத தலைப்ப கொடுத்து
நான் விரும்பும் தலைப்புன்னு
மனப்பாடம் பண்ணி எழுத்துறன்
மனசுக்குள்ள நித்தம் குமுறுரன்

நம்ம ஊரு ஆத்துல பொதி சுமக்கும்
கழுதையா நானும் புத்தக மூட்ட சுமக்குறன்
புரிந்து படிக்க முடியாம புழுவா நா துடிக்கிறன்

ஒழுக்கம் கற்று கொடுக்குரனு
அடுத்து இருக்கும் நண்பனுட்ட
பேச கூட தடுக்குறாங்க எங்கள
கைதி போல அடைக்குறாங்க

ஆறு வயசு முடியல
அறுபது பக்கம் படிக்கிறன்
ஆறு மணிக்கு முழிக்கிறன்
ஆதி அந்தம் எழுதுறன்
அதனால முதலிடம் பிடிக்கிறன்

ஆசிரியரின் பெயர் ஓங்க படிக்கிறன்
தந்தை தாய் மனம் மகிழ நடிக்கிறன்
மனம் பகிர முடியாம தவிக்கிறன்

புரிந்து படிக்கவில்லை
பயந்து நானும் நடிக்கிறன்
மனமுணர்ந்து படிக்க வேண்டியதை
மனப்பாடமாக படிக்கிறன்

உணர்ந்து படித்து உள்கொண்டு
கருவாக உருவம் தரும் தேர்வினிலே
பொட்ட மனப்பாடம் செய்து
கக்கி வைக்கிறேன் காகிதத்தில்

ஒருவனை முதலிடமாக்க அனைவரும் ஆக்கப்படுகிறார்கள் இங்கே முட்டாளாக

எங்கள் சிறகுகளை ஒடித்து நடக்கிறது
இங்கு சிறப்பு வகுப்புக்கள்

பாவம் கடிகாரமுள் நகர நடக்கிறது
இங்கே பயிற்சி வகுப்புக்கள்

ஐந்து வயது சிறுவன் நானும்
ஆறு நாளும் கல்வி கற்க்குறன்
பெற்றோருக்கு பயந்து ஆசிரியரும்
ஆசிரியர் கேள்விக்கு பயந்து பெற்றோரும்
மாற்றி மாற்றி உருட்டிவிட
பகடையாக உருளுரன்

உலகம் சொல்லி தரும் கல்வி -என்று
உள்ளதை சொல்லி தருமோ
முதலிடம் பிடிக்கச் சொல்லும் கல்வி -என்று
முயற்சிசெய்ய திறமை வளர்க்ச் சொல்லுமோ

வரலாறை மனனம் செய்ய
சொல்லும் கல்வி- என்று
வாழ்கையை உணர வைக்குமோ

படி படியென சொல்லாமல் வாழ்வின்
பிடிப்பை என்று சொல்லிடுமோ
என்போன்ற பிஞ்சுகள் மனம்
நஞ்சாவதை என்று அறிந்திடுமோ

காலை முதல் மாலை வரை
புத்தகம் பார்த்தே படித்திட்டால்
நானும் சீக்கிரம் பைத்தியம்தானென்று
இந்த உறவும் உலகமும் என்று உணர்ந்திடுமோ

சிறகை கட்டிபோட்டு பறக்கச்
சொல்கிறது சிந்தை கெட்ட உலகமிங்கு
பறக்க ஆசைகொண்டு சிறகை ஒடித்து
உயிரும் ஊசலாடி போனோர் பலருண்டு

உணர்வை புரிந்து உன்னதமான வாழ்விற்கு
உயரிய வழி காட்டும் கல்வி என்று வந்திடுமோ
என்போன்ற பிஞ்சுக்கள் மனம் வெம்பாமல்
மகிழ்ச்சியில் கல்வி கற்கச் செய்திடுமோ ?

...கவியாழினி..

எழுதியவர் : கவியாழினி (6-Nov-13, 10:24 am)
பார்வை : 205

மேலே