துகிலுரித்த மேனியாய்
ஏழிசை வழங்கும்
யாழ் போல்
உன் குரலாம்....
இசைப் பிரியா
என்பதுதானே
உன் பெயராம்....
ஈழத்து மண்ணின்
(அலங்)கோலத்தை
நீ சொன்னாய்....
இன
வெறியோடு வந்த
காமுகர்களுக்கு விருந்தானாய்.....
துகிலுரித்து
உன்னை
துவம்சம் செய்தனர்....
மானபங்கப்படுத்தி
உன்னை
மரணிக்கச் செய்தனர்....
யுத்த களத்தில்
உன் போல் இது
எத்தனையாவதோ...?
காலத்தின் கணக்கில்
தீர்ப்பு சொல்வதும்
எப்படியோ...???