தோழியே ஏங்குகிறேன் உன்னை காண

அன்பில் நிறைந்தவளே ஆருயிரில் கலந்தவளே
என் தோழி என்னும் இனிய பெயர் கொண்டவளே
கண்ணில் உனை வைத்து நான் கண்ட காட்சிகளும்
நினைவில் உனை வைத்து நான் கொண்ட நித்திரைகளும்
என்றும் நீங்காமல் நிழலாய் என் மனதில்...
காதோடு கதை சொன்ன காலங்கள் மாறி
இன்று கண்ணீரை பரிசளித்தாயடி என் ஆருயிர் தோழி..!
எத்துன்பம் எதிர்வரினும் இடை விடாமல் நீ நின்றாய்
வந்த துன்பங்கள் அத்தனையும் துரும்பாய் ஆனதுவே...!
இன்று இணைந்து கொண்டாட நீ இல்லாமல் இன்பங்கள் கூட ஏமாற்றம் தருகின்றனவே..!
ஐந்து நிமிடங்கள் உனை பிரியவே இதயம் கனக்கும்..
இன்று ஏனோ இத்துணை தொலைவில் இருக்கும் நிலை...
நான் அறிவேன் காலத்தின் கட்டளைக்கு எவரும் விதிவிலக்கு இல்லை என்பதனை..
அன்றே எந்த நிலையை எதிர்கொள்ள இருவரும் கலங்கினோமோ,
அந்த நிலை இன்று நம் எதிரில்...
பிரியாதிருக்க விண்ணப்பம் இட்டிருந்தோம் இறைவனிடம்
இன்று வரை இறைவனிடத்தில் அது போய் சேரவில்லை என நினைக்கிறேன்
இந்த நான்கு வருடம் நாம் கொண்ட நட்பை சித்தரிக்க,
போதாதடி எழுதுகோலும் காகிதங்களும்...
எனவேதான் கன்னங்கள்தனை காகிதமாக்கி
இமைகள்தனை எழுதுகோலாக்கி
நித்தம் எழுதுகிறேன் உனை எண்ணி கண்ணீர் எனும் கவிதைதனை ...
இப்போது மட்டுமல்ல எப்போதும் கூறுவேன்
என் மரணம் கூட உனக்கு தெரியாமல் பார்த்து கொள்வேன்,
உன் கண்ணீருக்கு அது காரணமாகும் என்றால்...
சந்திக்கும் நாள் எண்ணி காத்திருக்கிறேன்
சிந்தனை ஏதும் இல்லாமலே..

எழுதியவர் : மீனாட்சி (6-Nov-13, 11:57 am)
பார்வை : 702

மேலே