533 வந்துபடித் தால்பெறுவீர் இன்பம், ஞானம்

கரும்புள்ளி பலகூட்டிக் கவிதை செய்தேன்
==கைகட்டி இருக்காமல் படிக்க வாரும்!
தரும்புள்ளி தமையெண்ணிப் படைக்க வில்லை!
==தருணமிதை விட்டால்நான் எழுத மாட்டேன்!
வரும்புள்ளி கள்மட்டும் நல்லோர் என்று
==வார்த்தைகளை விடமாட்டேன் ! வந்தால் ஓர் நாள்
பெரும்புள்ளி களில்,ஒருவர் ஆவீர் ! ஆமாம்!
==பெரும்பயன்கள் நற்றமிழால் நிறைய உண்டே!

தருணமிதைப் பயன்படுத்தத் தவற வேண்டாம்!
==தமிழென்றால் இளக்காரம் கொள்ள வேண்டாம்!
குருவொருவர் எல்லோர்க்கும் கிடைப்ப தில்லை!
==குட்டிடுவார் எனும்பயமும் தேவை யில்லை!
வரும்படிக்குச் சொல்வது,என் கடமை! நீங்கள்
==வந்துபடித் தால்பெறுவீர் இன்பம்; ஞானம்!
இரும்படிக்கும் இடத்திற்கா அழைப்பேன் உம்மை!
=='எழுத்துடாட் காம்'என்னும் இணையத் திற்கே!
ooo ~* ~ ooo

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (8-Nov-13, 12:27 pm)
பார்வை : 128

மேலே