இந்தியன் - குமரிபையன்

பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா எங்கள் இந்தியா

இந்த இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்

அதன் மடியில் விளையாடும் ஆயிரமாயிரம் நதிகள்

இதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சை போன்றதாகும்

வானத்தின் நிழலாய் உன் கரையோரம் நாங்கள் நின்றோமே

அந்த நாளை எண்ணிப்பார் நீண்டு நிமிர்ந்த கங்கையே

எங்கள் பாரதம் தான் எங்கள் அரவனைப்பும் பாதுகாப்பும்

எங்களுக்கு இது எந்த பேதத்தையும் கற்பிப்பதில்லை

இங்கு வாழும் மனிதர்கள் நாங்கள்! எங்கள் நாடே இந்தியா..!

----------------------------------------------------------------------------
கவிஞர் அல்லாமா இக்பால் எழுதிய "ஸாரே ஜஹான் சே அச்சா " பாடலின் தமிழ் ஆக்கம் இது..!

இதை பற்றிய ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடுகிறேன் கேளுங்கள்..!
விண்ணில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா(63). கடந்த 1984-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி ரஷ்யாவின் ‌சோயூஸ் விண்கலம் வாயிலாக விண்ணிற்கு சென்றார். அங்கு இருந்து அன்றைய பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் விண்வெளியில் இருந்து பேசினார். அப்போது ராஜீவ் அவரிடம் நமது இந்தியா அங்கு இருந்து பார்க்கும் போது எப்படி இருக்கிறது என்று கேட்டார்..!
அப்போது அவர் சொன்ன வார்த்தை " "ஸாரே ஜஹான் சே அச்சா "..!
அன்று அதன் பொருள் தெரியவில்லை..! இப்போது நினைத்து பார்கிறேன்... எந்த அளவு அர்த்தமுள்ள கவிதை வரிகள்..!
----------------------குமரி----------------------------------------------

எழுதியவர் : தக்கலை கவுஸ் (8-Nov-13, 5:13 pm)
பார்வை : 391

மேலே