இசைப்பிரியாக்கள்

சிலபொழுது உமை நினைத்து
கோபத்தில் சிவக்கின்றன
விழிகள்...!
சில பொழுது உமை நினைத்து
ஆவேசத்தில் புடைக்கின்றன
நரம்புகள்...!
சில பொழுது உமை நினைத்து
சோகத்தில் அழுகிறது
இதயம்..!
சில பொழுது உமை நினைத்து
ஆற்றாமையால் எழுகின்றது
பெருமூச்சு...!
பல பொழுது உமை நினைத்தும்
பயத்தில் எதுவும் பேசாது மூடுகின்றன
இதழ்கள்...!

எழுதியவர் : புஸ்பராசன் (8-Nov-13, 5:59 pm)
பார்வை : 100

மேலே