மானுடம் வேண்டும்
என் உயிரை பறிக்கும் உரிமை ,
உனக்கு தந்தது யாரோ!!!
சகுனங்கள் எல்லாம் சரி இன்று,
என் சமுதாயம் தான் சரியில்லை!
காந்தி கண்ட கனவு,
வெறும் கனவாகி போனது!
மனித மிருகங்களின் நடுவில் தான்,
வாழ்கிறோம் என்பதை,
ஒவ்வொரு நாளும்,
உலகை உணர செய்கிறது,
இந்தியா !
பெண்களுக்கு இட ஒதுக்கிடு 33% என்பது,
அவர்களின் பாது காப்பிற்கும் தானா?
தாயுக்கும் தாரத்துக்கும்,
மட்டும் அல்ல,
மனைவிக்கும் மகளுக்குமே,
வித்தியாசம் தெரியாத மிருகங்கள் !
போற்றி பாதுகாக்க வேண்டிய,
பெண்ணை,
சக மனுசியாக கூட,
பார்க்காமல் வாழ்வது கொடுமை!
பெண்ணை காக்க,
தந்தை,
அண்ணன்,
கணவன்,
மகன் என்ற உறவுகள்,
மட்டும் போதாது,
தாய்மை உணர்வோடு,
பெண்ணை பார்க்கும்,
மானுடம் வேண்டும்!!!