எண்ணங்கள் நூலிலே
ஒரு சிறு எண்ணம்
மனதில் தோன்ற
தட்டினேன் மடி கணினியில்
எண்ணங்களும் கருத்துக்களும்
மாறி மாறி வர
தொகுப்பை அமைத்தேன்.
அழகாக வந்தது
கொத்தாக மலர்ந்த்தது
மணம் பரப்பியது
புத்தக வடிவத்தில்
தாள்கள் சேர்ந்த உருவத்திலும்
இ நூல் என்ற தோற்றத்திலும்.
சேர்ந்து வாழும் காலம் போய்
தனித்து வாழும் நிலைமை வந்து
தான் தன குடும்பம் என்று பிரிந்து
தனியாகவே வாழும் நேரத்தில்
மாறிக் கொள்ளும் வகையிலே
பழகிக் கொள்ளு ம் பயிற்சி புத்தக வடிவிலே.
தனிமை பாதிககாது என்ற நினைப்புடன்
தன்னால் முடிந்த உதவி நல்கி
இயன்ற வரை இனிமையைக் கொடுத்து
நலிந்தோர்க்கு வெகுவாக உதவி
சிறப்புடன் வாழ்ந்தால் பெரும் பயன்
என்று வலியுறுத்தும் நூலை எழுதினேன் .
இது பழம் பஞ்சாங்கம் எனலாம்.
இது எல்லோருக்கும் தெரிந்தது எனலாம்
இது ஒரு கோட்பாடு
இது ஒரு தெளிவு
இதில் காண்பவை நடந்தவை
வழி முறைகள் வெவ்வேறு வகையானவை.
.