உடல்

உரல்வாய் மெல்லும்
ஊறவைத்த அரிசி போல
என் உயிர்வாய்
மரணம் மெல்லும்

கடைவாய் மெல்லும் மாட்டைப்போல்
அது கனிவாய் மெல்லும்

அதுவாய்
இதுவாய்

பொதுவாய்

சுகமாய் வாழ்ந்த வாழ்வை
எண்ணிப்பார்க்கச் சொல்லும்

மெதுவாய் உதுவும்
என் மலர்வாய் தடவி
மோகம்கொள்ள

ஜடமாய்
உடலும்
மாறிப்போகும்

நாற்றம் வீசி
பிணமாய் மண்னுள் மக்கி
உடலும்
ஊக்கி ஆகும் !

எழுதியவர் : பிரகாசக்கவி - (10-Nov-13, 2:41 pm)
பார்வை : 342

மேலே