துளிப் பா 3

துளிப்பா -3
------------------
கடவுள்
===========
விழுந்த ஒலி கேட்டு
பதறி ஓடிவந்த தாயைப் பார்த்து
சிரித்தது குழந்தை
ஆம் கடவுள் அங்கே ......!
***************************************
பெண்ணியம்
============
பேருந்தில் உரசியவனைப் பார்த்து
கண்ணடித்து கட்டிக்க சம்மதமா என்றாள்
உரசியவன் ஒடிந்துப் போனான் ....!
பெண்ணியம் வாழ்க ....!
***********************************************************
காதல் வாழ்க ....!
==================
இளைய இரு மனங்கள் காதலில்
ஒன்றாக கலந்தன - ஜாதியும்
மதமும் அங்கே தலை குனிந்தன ...
வாழ்க காதல் ....!
--------------------------------------------------------
வலி
=====
வலியின் வேதனையால் தான்
புரட்சிகள் பிறந்தன .....................!
சமுதாய விடியலுக்கு
வலிகளே வாசலாகின்றன ............!
------------------------------------------------------------
தலை முறைகளின் இடைவெளி ...!
===============================
அன்று மழலையின் கையைப் பிடித்து
பள்ளியில் சேர்க்க அழைத்துப் போனார் தந்தை
இன்று தகப்பனின் கையைப் பிடித்து
முதியோர் இல்லத்துக்கு அழைத்து வந்தான்
பிள்ளை - இது தான் தலை முறைகளின்
இடைவெளியோ ..............!
---------------------------------------------------------------
முதல் படி ...!
==============
விழுந்தவனுக்கு எழுவோம்
என்ற எண்ணம் தான்
வெற்றியின் முதல் படிக்கட்டு ...!
----------------------------------------------------------
மனித நேயம் ..
==============!
கருப்பான காக்கையின் கூட்டில்
இனிமைக் குரல் குயில் குஞ்சிகள் ...!
மலர்ந்தது அங்கே மனித நேயங்கள் ...!
சில மனிதர்கள் இன்னமும்
ஜாதி மத கூட்டுக்குல்
மணம் வீசாத மலர்களாக - இந்த
சமுதாய பூந் தோட்டத்தில் .........!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (11-Nov-13, 8:10 am)
பார்வை : 203

மேலே