சித்திரைச் சாயல்
கோப குணமும்
குழந்தை தனமும் சிவந்த பார்வைகள் அவள் !
முத்துக்கள் சிந்தும்
மழலை சிரிப்பும் பிறர் நலம்
கண்டுகளிக்கும் உண்மையை கண்டேன்
உன் உண்மை மனதில் !
உண்மை சிந்தும்
மண்ணின் சாரலும்
மண்புழுவின் குணமும்
மனதை துளைத் தெரிகின்றன !
உள் மனதும் உன்மேல்
காதல் கொள்ளும் அளவுக்கு
அன்பை விதைக்கும் குணம் !
நடுக்காட்டு மரங்களையும்
வீட்டுச் செடியாய் மாற்றும் உன் குணம் !
மாத்திரை மாறது
பேசும் உன் பேச்சுக்கு
பாலைவனைக் காற்று கூட
தென்றலாய் மாறும் !
உன் பார்வை ஒன்று போதும்
பாறைக்கும் நட்பு முளைக்கும் !
அதிகாலை சூரியனும்
உன்முகம் தொட்ட பிறகே என்னிடம்
தஞ்சமடைகிறது
நட்பு செய்தியுடன் !
விழி கண்ட பாதையை எல்லாம்
நன்மை கடலாய் மாற்றியாமைத்தாய் !
வெட்கம் கண்ட வேதனை சாலைகள் கூட
மகிழ்ச்சி பாதையை மாறியது !
கலங்க வைத்த காதலும் கூட தோற்கும்
உன் நட்புக்கு முன்னால் !
என் உள் மனக்குரல் கேட்டேன்
உன் நட்புக்குரல் ஒலித்த போது!
உந்தன் மகிழ்ச்சி
என்னோடு பிறந்தது
நான் இறந்தாலும் நிலைக்கும் !