எளிய முறையில் காதலிக்கும் வழி ====மெய்யன் நடராஜ்
உனக்கு மட்டுமல்ல
நீ காதலிக்கும் அவளுக்கும் (அவனுக்கும்)
இதில் சஞ்சலமில்லை .
எதிரிகள் இல்லை
அடுத்தவன் கைமாறும்
என்ற கவலை இல்லை
பெற்றோருக்கோ இல்லை
மற்றோருக்கோ
அஞ்சும் அவசியமில்லை
மொத்தத்தில்
யாருடைய சம்மதத்திற்காகவும்
காத்திருக்கவும் தேவை இல்லை
நேரம் காலம் அவசியமில்லாமல்
பணவிரையமில்லாமல்
எத்தனை பேரையும்
எளிய முறையில்
நீ காதலிக்கலாம்
ஒருதலைக் காதலாய்!