அருட் பணியாளர் சி எம் விக்டர்
தவழும் குழந்தையை காக்க
கருவின் குழந்தையை கலைக்க
எண்ணியது தாய்மனம் - தான்
உண்ட மாத்திரைகள் சக்தியிழந்து
கருவை தரைக்கு கொண்டுவந்தது
என்னை இழந்து -உன்னை
மீட்கிறேன் உயிரே என்றுரைத்து
வந்த குழந்தை பிறந்ததினம்
குழந்தைகள் தினம்
கிராமம் மறந்து பட்டணத்தில் வந்து
பண்புகள் மாறாமல் வளர்ந்த சிறுவன்
அன்பின் வடு தாங்கி அன்னையிட்ட
கட்டளைகளுக்கு சிரம்தாழ்ந்து
ஆழ்ந்திட்ட வாழ்வின் காலங்கள்
இன்னமும் மறையவில்லை
சாந்தோமில் மழலைக்காலம்
சின்னமலையில் பள்ளி காலம்
வேளச்சேரியில் கல்லுரிக்காலமென
வாழ்வியல் இடங்கள் இவருக்கு
அடையாலமாயின
குருக்குல வாழ்வியல் - வாழ்வின்
பணிகளுக்கு சட்டங்களாயின
தொடர்ந்தது குருக்குலம் - முடிவில்
வென்ணங்கி தரித்து குருபட்டம் பெற்று
குணத்தோடு நின்றார்தன் சக குருக்களோடு
முதல் பணி மதுராந்தகம்
அடுத்தபணி கீழச்சேரி
மூன்றாம்பணி கோடம்பாக்கம்
நான்காம் பணி சென்னை சென்ட்ரல் - என
இருந்த இடங்களெல்லாம் இன்புற்றன
இவர் பணியால் மகிழ்ந்தனர் மக்கள்
வல்லவராய் நல்லவராய் குணம் உள்ளவராய்
உயர்ந்து தன் ஐந்தாம் பணிகாலத்தில் சமுதாய கல்லூரிக்கும் முதல்வரானார் - தன்
ஆறாம் பணிகாலத்தில் இன்று
கொருக்குபேட்டை அருட் பணியாளரானார்
பிறக்க போகும் தன் 39 வது அகவையில்
சிறுவர்தினதினை சிறப்பிக்கிறார்
இடைப்பட்டக் காலங்களில்
இறையருட் பயணங்கள் சென்று
வெளி நாடுகளில் போதித்தது
உழைப்புக்கு உயர்வு ஊட்டிய பெருமையாகும்
சென்ற காலங்கள் நன்மை பெற்றன - இனி
வரும் காலமும் நன்மையடையும் உம்மால்
விடிவெள்ளி பாதையாய்
வியந்திடும் சொற்ப்பொழிவாளராய்
இல்லாதவர்க்கும் இயலாதவர்க்கும்
இறைத் தொண்டனாக வளம் வந்து
வாழிய நீ வாழ்வாங்கு -என என்
நாவினால் வாழ்துப்பாடுகிறேன்