சிறப்புடனே தமிழ் வளர்ப்போம்
சிறகடிக்க பரந்த வானம்
சிந்தை பெருக சிறந்த புத்தகம்
சிரித்து மகிழ தமிழில் சொற்கள்
சிங்காரமே வாழ்வில் நொடிகள்....!
சீரியசாய் எதுவுமில்லை தமிழில்
சீக்கெனவே பிறமொழி எழுத்து தவிர..!
சீருடனே நலம் பெற வைப்போம்
சிறப்புடனே சுத்தத் தமிழ் வளர்த்து...!