யாரறியப் போறாங்க

வரதட்சனை தந்து
மணமேடை ஏறும்
புதுப்பெண் போல
படியேறும் புது வழக்கு

கிராமத்து பெண்-வெட்கத்தில்
வெளியில் வராததைப்போல்
படிதாண்டா பத்தினியாய்
வழக்குகள் கோர்ட்டில்

கணவனின் கொடுமையால்
கண் கலங்கும்
மனையாளைப்போல்
வக்கீலின் வாய்தா

வீடு கெட்டால்
மாறும் ஒரு தினம்
நாடு கெட்டால்-என்றும்
சீரழியும் சமுதாயம்

என் நெஞ்சின் பாரத்தை
யாரிடம் சொல்லுவேன்
சொல்லாமல் போனாலோ
யாரறியப் போறங்க!

எழுதியவர் : கோ.கணபதி (14-Nov-13, 12:55 pm)
பார்வை : 61

மேலே