நாங்கள் நண்பர்கள்
கல்லூரி வாசலில்
வந்தமர்ந்த வேடந்தாங்கல்
பறவைகள் நாங்கள்!
புதியதாய் பூத்த
புத்தம் புது
மலர்கள் நாங்கள்!
நாளை வெற்றிகனிகளைத்
தொடுவொமென்ற
கனவுகளோடு!
காற்றோடு
சுதந்திரமாய்!
தோள்கொடுக்கும்
தோழர்களோடு!
தொட்டுபேசும்
தோழிகளோடு!
நட்புக்கோர்
இலக்கணமாய் நாங்கள்!
எங்களுக்குள்
இரத்த சொந்தமில்லை!
பெற்ற சொந்தமில்லை!
அதைவிட
வலியதாய் உறவு!
மதிய உணவில்
எல்லோரும்
பங்காளிகளாய்!
கவிதை படைக்கும்
கவிஞர்களாய்!
வகுப்பறையில்
முட்டாள்களாய்!
அரட்டையடிக்கும்
அறிவாளிகளாய்!
பேருந்தில்
திருட்டு பயணிகளாய்!
"அரியர் வைக்காதவன்
அரைமனிதன்" கைவிட
முடியாத கோட்பாடுகளோடு!
எங்கள் நட்பு
நடவு செய்யபட்டிருக்கும் !
பாஞ்சாலியாய்
சிகரெட்
ஐந்து பேர்களோடு
அதுவும் எரிந்து கொண்டிருக்கும் !
சாதி சன்றிதழின்றி
வேறெங்கு இருக்காது!
வறுமை மறந்து!
வாழ்க்கை அருமை
உணர்ந்த நண்பர்கள் நாங்கள்!
வருங்கால அறிஞர்களாய்!
அரசர்களாய்!
நினைவுகளில் நீந்தி
வீதிகளில் திரிவோம்!
சில நாய்களும்
எங்களை கண்டு
நகர்ந்து கொள்ளும் !
நாங்கள் சிரித்து கொண்டே
பிரிகின்றோம்!
நாளைய தேசம்
நமது கையில்
என்ற பொறுப்புகளோடு!
* * *
கோடீஸ்வரன்