பருவக் கிளிகள்
பாடும் கிளிகள் இரண்டு
பருவம் வந்தது என்று
துள்ளிப் பாடி ஆடும்-தினம்
காதல் சுவையில் கூடும்!
செக்க சிவந்த வானம்-என்
பூமகள் இளதேகம்!
வட்ட வடிவ மதியம்-என்
காதலியின் வதனம்!
அழகில் மயங்கி சென்றேன்
ஆசையின் எல்லையில் நின்றேன்!
அன்புமீறி அழுதாள்-என்
காலில் வீழ்ந்து தொழுதாள்!
உயிருடன் கலந்த அவளை
அணைத்து நானும் மகிழ்ந்தேன்!
துகில்மூடி வருவாள்-மெல்ல
துடியிடை தொட நெளிவாள்!
விலகி சென்று நிற்பாள்-மனதில்
எண்ணி மகிழ்வாள்-கொண்ட
நாணம் அடக்கி வருவாள்
நாயகன் விருப்பம் தீர்ப்பாள்!
உயிருடன் கலந்த அவளை
அணைத்து நானும் மகிழ்ந்தேன்!