என் அம்மு குட்டிக்கு
என் வாழ்வில் எனக்கு கிடைத்த
மிக பெரிய பொக்கிஷம் நீ....
என்னவனின் அன்பை இரட்டிப்பாக்கி தந்த
என் இதய சுவாசம் நீ...
அழகிய வார்த்தைகளில் சுதி சேர்க்கும்
சுகமான மழலை மொழி நீ....
பார்க்கும் அனைவரையும் உன் பார்வையில்
மிளிர வைக்கும் பட்டாம் பூச்சி நீ...
என் வாழ்வுக்கு அர்த்தம் புகட்டிய
அழகிய ஹய்க்கு கவிதை நீ...
எதிர்கால கனவுகளை மெய்மையாக்கிய
எட்டாவது அதிசியம் நீ ....