இன்று உன் பிறந்த நாள் நான் வளர்ந்த நாள்

உனக்கின்று ஒன்பதாவது பிறந்தநாள் என்றறிந்து
கனக்கின்றது உவகையில் மனம் களித்து.வாழ்க நீ!

நன்று என பலர் நற்றமிழை பல
குன்றுயர் மாமணிகள் வாழ்த்திய
மன்றமென உனைக் கண்டேன்
இன்று உனக்குப் பிறந்தநாள் !!!

கன்று என வந்தோற்கு களம் அமைத்து
நன்று வளர்த்து நானிலம் போற்ற
என்றும் புகழ் பல பெற்றிட பிறந்தாய்
இன்று உனக்கு ஒன்பதாவது பிறந்தநாள்...!!!!

தமனியெங்கும் உன்னால் தமிழ் ஓட்டம் கவனிக்கிறது உன் சேவையை நானிலம்..
அவனி முழுதும் உன் அழகுத் தமிழின்
பவனி .வாழ்க..வளர்க ஒளிர்க...மிளிர்க !!!!

சீறிப் பாயும் சீற்றத் தமிழ் -உயர் காதல்
ஊறி மேவும் வாலிபத் தமிழ் -மண்ணில் அன்பு
தவழ மானுட அமைதித் தமிழ் -முகமறியா நட்பு
கமழும் தோழமைத் தமிழ் -என நீ
எத்தனைத் தமிழுக்கு வாசல் திறந்தாய் !!

பித்தன், பரிசு வென்றான்,நடுநிலையாளன்
தத்தித் தவழ் வாசகன் என பன்முகம் தந்தாய்
தித்திக்கும் தமிழ் வளர்க்க உன் மென்பொருள்
எத்திக்கும் மணக்கும் நிலை பெற்றாய் .வாழ்க.!!

புவியெங்கும் உன் சேவை அறிமுகம் --தமிழில்
கவி பலர் உன்னால் இங்கு சரிசமம் --எனவே
தவிக்கிறேன் தமிழில் சொற்கள் போதாதென்று.
குவிக்கிறேன் இதழ்களை நாளும் நீ வாழ..! வளர.!

பிறந்தநாள் அறிவிப்பு அழகு . -மனிதன் மண்ணில் மறந்து வரும் பசுமை பிரமாக்களை முன் வைத்து
சிறந்த பசுமைப் பரப்பை விரித்தளித்து- அதில் பல
பறவை மலர் பசுந்தழை என அழகு வடிவமைத்து .



பெருகும் அன்புடனும் நன்றியுடனும்
தி.அமிர்தகணேசன்..(அகன்-)
(புதுவை காயத்திரி -வீரன் தாமரை -மீண்டும் அகரம் )

எழுதியவர் : அகன் (16-Nov-13, 7:22 pm)
பார்வை : 103

மேலே