விடைகொடுத்தாய் ஒரு கேள்விகுறியோடு

ஈரெட்டு பருவ வயதில்
பள்ளிகூட ஆசையில்லை
பருக்கள் முளைக்கும் காலத்திலும்
காதல் வயபட்டதில்லை

மட்டை பந்து மந்திரம்- உன்
இரத்தநாளம் முழுவதும்
குட்டைவுயரம் என்றாலும்- நின்
சாதனை இமயம் விஞ்சிடும்.

கட்டிபோட்டாய் அனைவரையும்- நீ
களத்திலிருந்து ஆடினால்
கண்கொட்டமறந்து பார்த்ததுண்டு-உனை
கடவுளென்றால் அதுபொருத்தமுண்டு.

நின்மட்டை தொட்டபந்துகள்
எல்லைகோட்டை தொட்டுவிடும்-நீ
ஆட்டமிழந்தால் களமட்டுமல்ல
ரசிகர்வீட்டுதொலைக்காட்சியும் கலங்கிடும்

இந்தியஅணி ஆடுதென்று
இதுவரையென்றும் பார்த்ததில்லை
உன்னைநம்பியே ஆடியதொருகாலம்
அதைஎவருமிங்கு மறுப்பதற்கில்லை.

அத்தனை திறமையிருந்தாலும்
ஒருபுத்தகம்போல அமைதியாய்
கர்வமில்லாமல் எளிமையாய்-யாவரும்
புருவம்வியக்க வாழ்பவன் நீ

நிச்சயம் பலஇன்னல்களும்-உனை
சத்தியசோதனை செய்திருக்கும்
மொத்தத்துக்கும் அகபடாது-நீ
முத்துக்குளித்த ஆண்டு இருபத்திநான்கு

அடக்கமுந்தன் நாவிலே -மற்ற
அத்தனையுமுந்தன் மட்டையிலே
இடுக்கன்வந்தால் அணியிலே- நீ
சிறப்பாய்களைந்தாய் நொடியிலே

உனைசொல்லிகொண்டே போகலாம்
நில்லாமல் அத்தனைவார்த்தையுலும் - நீ
இல்லாது இந்தியணி சிறக்கலாம் -அது
மன்னன் அணியாத மகுடம்தான்.

எழுதியவர் : மதனா (17-Nov-13, 12:08 pm)
பார்வை : 53

மேலே