தோனியும் தாந்தோணியும்

தாந்தோணி: தோனி சார், நீங்க எவ்வளவு வயசு வரைக்கும் ஐபிஎல்லுலே விளையாட நினைக்கிறீங்க?
தோனி: இப்போ எனக்கு 42 வயசு, இன்னும் ஒரு 24 வருஷம் ஆடலாம்னு ஒரு சின்ன ஆசை இருக்கு.
தாந்தோணி: இது ரொம்ப அநியாயமா இருக்கு தோனி சார். இந்த மாதிரி ஒவ்வொருத்தரும் நினைச்சா மத்தவங்க கதி என்னவாகும்?
தோனி: மக்கள் என்னை மைதானத்தில் பார்க்க விரும்புகிறார்கள் , குறிப்பாக சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் நான் ஒரு பந்தாவது அடிக்கவேண்டும் என்று ரொம்ப ஆவலாக இருக்கிறார்கள்.
தாந்தோணி: நீங்க சென்னை ரசிகர்களை மட்டும் பார்க்கக்கூடாது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 'தோனி போ நீ ' என்ற ஒரு கருத்தெடுப்பில் 90 சதவிகிதம் மக்கள் நீங்கள் கிரிக்கெட்டை விட்டு விலகவேண்டும் என்று நினைக்கிறார்கள். நீங்க ஒவ்வொரு மேட்சிலும் அஞ்சு அல்லது அதிகமாப்போனா பத்து பந்துகளைத்தான் எதிர்கொண்டு ஆடுகிறீர்கள். எனவே நீங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருப்பதுதான் நல்லது என்பது எனது கருத்தும்கூட.
தோனி: அப்படிப்பார்த்தா, உங்க ராஜனிகாந்தும் கூடத்தான் படங்களில் நடிப்பதை விட்டுவிடவேண்டும். என்னை விட மூன்று மடங்கு அவர் வயதில் பெரியவர். பிரதமர் முடிகூட அதுமாதிரிதான். இவங்க எல்லாம் இன்னும் இன்னும் புகழ் அடையவேண்டும் என்று நினைக்கும்போது நான் மட்டும் ஏன் அப்படி நினைக்கக்கூடாது.
தாந்தோணி: ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது சரிதான். இந்த மக்களை எப்படித்தான் திருத்துவது. எல்லாத்துறையிலும் ஒரு வயது வரம்பை கொண்டு வரவேண்டும். அப்போதுதான் நம் நாட்டின் தலைவிதி மாறும்.
கடைசியில் ஒரே ஒரு கேள்வி, உங்களுக்கு என்ன கொடுத்தால் நீங்கள் ஐபிஎல்லிலிருந்து ஒரேடியாக வெளியேறுவீர்கள்?
தோனி: கொஞ்சம் உங்க காதை என் பக்கத்தில் கொண்டாங்க . " வருஷா வருஷம் எனக்கு மூணு கோடி ரூபாய் கொடுத்தால் நான் கிரிக்கெட்டுக்கு ஒரு கும்பிடு போட்டுவிடுகிறேன்"

தாந்தோணி மனதில் நினைத்துக்கொள்கிறார். "ஆடுபவரும் சரி நடிப்பவரும் சரி, இசையமைப்பவரும் சரி, விட்டால் நூறு வயசு வரைக்கும்கூட அவங்க துறையிலிருந்து விலகமாட்டாங்க. இந்த மக்களின் அறியாமை எப்போது மறையும்"?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (30-May-24, 3:40 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 17

மேலே