ஊக்குக் கவிதை

ஊக்கு ஏனோ ஊக்குவிக்க
உற்றுப்பா ரென்றது
உற்று நானும் பார்த்திடவே
கிரீட மொன்று தெரிந்தது

சிரசின் மீது வாயிற் கதவு
திறந்து ஏனோ இருந்தது
கீழிறங்கிச் செல்ல இடையில்
வட்ட மொன்று யிருந்தது

சுற்றியதைச் சென்றடைய
கூர் முனை வந்தது.
இழுத்து அதை இணைத்திடவும்
முழுவுரு பெற்றது !

எழுதியவர் : (17-Nov-13, 3:18 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 67

மேலே