இரசனைக்கு உரியவரை மாமனிதர் ஆக்காதீர்

இரசனைக் குரியவர்களும்
மரியாதைக் குரியவர்கள்தான்.
மரியாதைக் குரியவரெல்லாம்
மாமனிதராக முடியாது.
காலத்தை வென்று நிற்கும்
செயல்களை செய்பவரே
மாமனிதர் பட்டியலில்
இடம்பெறும் நிலையுடையார்.
விளையாட்டு வீரர்களும்
வெள்ளித்திரை யாளர்களும்
இரசிகர்களின் மனங்களில்
நீங்கா இடம் பெற்றிருந்தாலும்
காலத்தை வென்று நிற்க
அவர்களால் முடியாது.
அரைநூற் றாண்டுகூட
அவர்கள்பெயர் நிலைக்காது.
அத்தகைய மனிதருக்கு
மிகஉயர்ந்த விருதைக் கொடுத்து
விருதின் மாண்பை குலைத்திடாதீர்.
இரசனைக்கு உரியவரை
மாமனிதர் ஆக்காதீர்!

எழுதியவர் : இரா, சுவாமிநாதன் (17-Nov-13, 7:34 pm)
பார்வை : 201

மேலே