இத்தனை தவங்களும் எதற்காக
முன்நூருநாள் தவமிருந்து
முத்து சிப்பியாய் எனைகாத்து
மூச்சைப் பிடித்து
பெற்றாள் அன்னை!
வாயிலே உணவெடுத்து
குஞ்சிக்கு கொடுக்கும் குருவி போல
முந்தானையில் முடிஞ்சுவச்ச
முக்கால் ரூபாய்கும்
எனக்கே பண்டம்!
ஆறுவயசுல
கம்மாயில விழுந்து
மூணுநாள மூச்சு பேச்சில்லாம
கெடந்து பிழைத்தது!
பத்துவயசுல
அரளிவிதையை தின்று
அரவுசுரா கெடந்து
முழிச்சது!
இருபத்தி ஒரு வருசமாய்
வசந்தகாலத்தை
வாசித்து அறியாமல்
வளர்த்தாளே அன்னை !
பெற்றவளின் பாலில்
கொழுத்த உடம்பை
வருத்துவது எதற்காம்?
என் தாய்
கண்ணீரும் செந்நீரும்
சிந்தியது எதற்காம்?
எந்த பூவினாலும்
ஜெயிக்க முடியாத
புன்னகை பூவை
எவளோ உதிர்த்தாளாம்!
எவளோ ஒருத்தியின்
சிரிப்புக்கா !
வேண்டாம் மனமே !
வேண்டாம்!
நீ நடந்த பாதசுவடை
நாளை படிக்க வேண்டும் !
இன்னும் எத்தனையோ
தவங்கள் வேண்டும் இதற்காக!
* * *
கோடீஸ்வரன்