ஐந்து இலக்க சம்பளமும் அடுக்கு மாடி குடியிருப்பும்
மதுரையில் இருந்தும்
திருநெல்வேலியில் இருந்தும்
தினமும்
உண்ணும் நேரம் உறங்கும் நேரம் தவிர்த்து
உழைப்பதற்காய்
கார்பரடுகளுக்கு
நேர்ந்து விடப்பட்ட மானுட கழுதைகள் நாங்கள்
ஒருநாளும் உண்டதில்லை
ருசி பார்த்து
கடல் பக்கம் தான் வீடு என்றாலும்
ஒருநாளும் கண்டதில்லை
இரவு நேர ஆழியின் ஆர்ப்பரிக்கும் அலைகளையும்
அது கூறும் அர்த்தங்களையும்
கொஞ்சுமொழி பேசும் செல்ல மகனிடம்
கெஞ்சி முத்தம் கேட்க நேரமில்லை
ஆசை மனைவியிடம்
ஊடல் பேச்சு பேச நேரமில்லை
இருந்தாலும் வாழ்கிறேன்
ஐந்து இலக்க சம்பளமும் அடுக்குமாடி குடியிருப்பும் இருபதால்.