எண்ணம்

எண்ணம் அது எதற்கு சொந்தம் ?
மூளையின் சொந்தமா ?
அதற்குள்ளே குடிகொண்ட
உணர்வுகளுக்கு சொந்தமா ?

இதயத்திற்கு சொந்தமா இல்லை
அதற்குள்ளே குடிகொண்டிருக்கும்
உள்ளத்திற்கு சொந்தமா ?

குருதி அது நமக்குள்ளே தான்
ஓடிக் கொண்டிருக்கிறது !
எண்ணம் மட்டும் நம்மை விட்டு
எங்கெங்கோ ஓடிக் கொண்டிருக்கிறது !

எண்ணத்திற்கு ஏணி பிடித்தால் அது
விண்ணையும் தொட்டுப் பார்க்கும்
எண்ணத்தை ஆள்பவன் அரசன் போன்றவன் !
எண்ணத்தால் ஆளப்படுபவன் ஆபத்தானவன் !

நல்ல எண்ணங்களை மட்டும்
உனக்குள்ளே விதைத்து விடு !
உன் குருதியொடு குருதியாய்
அதை எப்பொழுதும் உனக்குள்ளே ஓட விடு !
நாடு சிறக்கும் நல்லவர்களால் ..!

எழுதியவர் : ஜெகதீசன் (20-Nov-13, 8:08 am)
Tanglish : ennm
பார்வை : 95

மேலே