பள்ளிக்குழந்தைகளே
பள்ளி குழந்தைகளே பால் முகங்களே
பஞ்சு போன்ற உங்கள் நெஞ்சில்
பதிய நிறைய சேதிகள் இருக்கு
பக்குவமாய் கேட்பது உங்கள் பொறுப்பு ........
தந்தையும் தாயும் உங்கள் கடவுள்
அன்பை காட்டும் ரத்த உறவு
உந்தன் வாழ்வே அவர்கள் உலகம்
உணர்ந்து வாழ்ந்து உயர்வாய் உச்சம் ........
கற்கும் இடமே கோவில் ஆகும்
கல்வி மட்டுமே உன்னை ஏற்றும்
ஆசிரியர் மீது பற்று கொள்ளு
அதனால் நிறைய கற்று கொள்ளு ..........
ஒழுக்கம் நிறைந்தது உன்னத வாழ்வு
இதை நீ இழந்தால் உனக்கு தாழ்வு
உயிரைப்போலவே ஒழுக்கத்தை போற்று
வாழ்வின் தரத்தை நீயே மாற்று ..........
உள்ளோர் எல்லாம் நல்லோர் அல்ல
உன்னை ஏற்றும் வல்லவர் அல்ல
எவரின் நட்பையும் பலமுறை யோசி
நல்லவரை மட்டும் என்றும் யாசி ..........
எவரையும் வெறுக்கும் குணமும் வேண்டாம்
பிறரையும் மதிக்கும் குணமே கொள்வாய்
பகைப்பால் என்றும் பயனேதும் இல்லை
நகைப்பாள் முடியாத செயலேதும் இல்லை .........
முடியாதது என்று ஏதும் இல்லை
முயற்ச்சித்து பார் உன்னால் முடியும்
தன்னம்பிக்கை மட்டும் துணையாய் கொள்ளு
தரணியில் நீ முதலில் நில்லு ..........
எனக்கு தெரிந்த கருத்தை சொன்னேன்
கவிதை வடிவில் அழகாய் தந்தேன்
ஏற்றுக்கொண்டால் நன்மை அடைவாய்
இல்லாவிட்டால் துயரம் பெறுவாய் .........