தித்திக்குதே

என்னவளே
எனக்கானவளே
எனை ஆள்பவளே ..

உன் நிழலாய் நானிருப்பேன்,
இனி உன் அருகில் தானிருப்பேன்..

உள்ளங்கையில் உன்னை ஏந்துவேன்,
உயிர் உள்ளவரை
உள்ளமெலாம்
உன் நினைவை தாங்குவேன்..

நான் போகும் பாதை நீயாக
அதில் பூக்கும் பூக்கள்
உன் நினைவாக ..

உறங்கும் இரவிலும்
விழிக்கும் கனவிலும்
உன்னை எண்ணி நான் தூங்க ..

என் உயிர் சுவாசம் நீயாக
என் உணர்வின் ஸ்பரிசங்கள் உனக்காக..

நானும் கூட கவிதையானேன்
என் பெயரை
உன் பெயரில் இணைத்து ...

நிலவைப்போல பெண்ணவள் வந்தாள்
இனி ஒவ்வொரு நாளும்
என் வாழ்வில் பெளர்ணமியாகும் ..

வசந்தம் எனக்கே
சொந்தம் ஆனது,
வாழ்க்கை சொந்தம் நீயானதால்..

என் தேவதை
என்னோடு வந்தாள் ,
வாழ்வின் தேவைகள் பூர்த்தியானதே ....

வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
கவிதையின் வரவால் தித்திக்குதே...

எழுதியவர் : kk (20-Nov-13, 6:35 pm)
Tanglish : thiththikkuthae
பார்வை : 134

மேலே