நம்பிக்கை

எப்பொழுதும் மழை பொழியும்
மேகம் அணிந்து வற்றாத நீர் சுரக்கும்
கேணிகள் நிறைந்து
பல பயிர்கள் , பல கனிகள்
விளைந்த நல் தேசம் !
மழையின்றி நீர் வற்றி
கண்டது கானல் ..!
பஞ்சம் விரட்ட , பட்டினி துரத்த
காடு , மலை பல கடந்து
கானலிலும் நீர் சுரக்கும் தேசம் கண்டார்
நம்பிக்கையில் நாடு கடந்தவர்கள்...!
பட்டினியில் மடிந்து
கானலில் கருகியே போனார்கள்
நம்பிக்கையற்று அங்கேயே கிடந்தவர்கள்...!
நம்பிக்கையற்றவனுக்கு நாடும் ஒரு நரகம் !
நம்பிக்கை கொண்டவனுக்கு நரகமும்
நாளை மடியும் சிறு துயரம் !
நம்பிக்கை விதையை விதைக்கும் முன்
அந்த விதை வெடித்து , முளைத்து ,
விருட்சமாய் வளர்ந்து நிற்கின்ற சூழ்நிலையை
உள்ளத்தில் உருவாக்கினால்
நம்பிக்கை தானாய் வளர்ந்து
வெற்றிக் கனிகளை தாங்கி நிற்கும்...!