கிழக்கு வெளுத்தது
பகலவனும் கண்திறந்து மெதுவாக தலைதூக்க
பவளமல்லி மலர்வாசம் இதமாக மனம்வருட
பட்சிகளும் இரைதேடி கூடுவிட்டு கிளம்பிவிட
படர்ந்துவரும் தென்றலும் பட்டாக மேனியுரச
பனிமுத்து இலைநுனியில் வெயில்பட்டு உருண்டுவிழ
பட்டாம்பூச்சி சிறகசைத்து ஒய்யார நடனமிட
பழுத்தகொய்யா கிளையமர்ந்து அழகாக அணில்கொரிக்க
பசும்வயலில் வெண்கொக்கு ஒற்றைக்கால் தவமிருக்க
பருத்ததலை ஓணானும் ஒற்றைக்கண்
சாய்த்துப் பார்க்க
பரிதிமுக தரிசனத்தால் பங்கயத்தாள் இதழ்மலர
பகல்பொழுதை வரவேற்க செங்கதிரும் ஒளிவீச
பரபரவென கீழ்வானம் சிவந்து கிழக்குவெளுத்தது!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
