பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்

தாயின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தான் மகன். அழகிய அவள் முகத்தில் நெளிந்து வந்திருந்த சில வெள்ளித் தலைமுடிகளைக் கண்டு, "அம்மா .. உன் தலைமுடி ஏன் வெள்ளை நிறமாகிவிட்டது" என்று வினவ, தாய், "அதுவா .. நீ குழந்தையாக இருந்த போது எப்பொழுதும் அழுது கொண்டே இருந்தாய். என்னை இரவில் உறங்கவும் கூட விடாமல் பல தொல்லைகள் கொடுத்து கஷ்டப்படுத்தினதால் வந்தது" என்றாள்.

அப்பொழுது, அங்கு வந்த அவள் தாயைக் கண்ட, மகன், "நீ என்னை விட மிகவும் தொல்லை செய்திருப்பாய் போலிருக்கிறது. அதனால் தான் பாட்டியின் தலையில் எல்லா முடிகளும் நரைத்துவிட்டன .. அப்படித் தானே அம்மா" என்று கேட்டதும் மகனின் கேள்விக்கு தாய் பதில் சொல்ல இயலவில்லை.

எழுதியவர் : (24-Nov-13, 3:28 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 125

மேலே