வெற்றி

வாழ்க்கை என்ற வட்டத்திற்குள்
ஒளிந்து வாழும் மனிதனே ,
இன்னும் எத்தனை காலம் தான்
இப்படி வாழ வேண்டும் என்ற யோசனை ???

வட்டத்திற்கு வெளியே கொஞ்சம் பார்,
நீ வாழ்கையில் சந்திக்க வேண்டியவை
இன்னும் எத்தனை என்பது
தெளிவாய் உனக்கு புரியும் .....

சுவருக்குள் அடைந்து கிடப்பது வாழ்க்கை அல்ல
அதையும் தாண்டி
சாதனை படைப்பது தான்
சிறந்த வாழ்க்கை ....

சாதித்த மனிதர்கள்
சோதனையை
சாதனையாக
மாற்றியவர்கள் ....

சிந்தித்து பார் ....
சாதனைகளை நிகழ்த்த
வயது ஒரு தடை இல்லை
என்பது நன்றாக விளங்கும் ....

சோதனைகளை கண்டு துவண்டு போக
மனிதன் பிறக்க வில்லை ....
அந்த சோதனைகளை சாதனையாக
மாற்ற பிறந்தவனே மனிதன் ....

அடிமேல் அடி எடுத்து வை ...
நம்பிக்கையுடன் போராடு
சாதனை கூட ஒரு நாள்
உனது தோள் மீது அமர்ந்து இருக்கும் ....

நீயும் இருப்பாய்
சாதனையாளர் பட்டியலில் ....
விடா முயற்சியோடு போராடு
வெற்றி என்றும் உன் பக்கமே .....

எழுதியவர் : Beni (25-Nov-13, 5:02 pm)
Tanglish : vettri
பார்வை : 3293

மேலே