விடுகதை ஆனேன் உன்னால்

மையிட்ட உன் கண்களால்,
என்னை மயக்கிச்.,
சிறை செய்தாய்,
விடுதலை எப்போது...!

கள்ளமில்லா உன் சிரிப்பில்,
என்னைக் கவிஞனாக்கி.,
கட்டிப் போட்டாய்,
உன் கயல்விழியாள்...!!

விந்தையான உன் பேச்சில்,
விருப்பம் கொண்டு.,
விடுகதை ஆனேன்..
உன்னால் இங்கு,
விடை தெரியாமல்...!!!

எழுதியவர் : லிங்கரசு கே (26-Nov-13, 3:54 pm)
பார்வை : 132

மேலே