சில கேள்விக்குப் பதில் இல்லை

கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன்

உறவுகள் என்மேல் கொண்ட நேசமத்தை

கண்டுகொண்டேன்.



எனக்காக யாருமில்லை

எனத் துடித்துக்கொண்டிருந்தேன்

எனக்காக யாரிருக்கிறார்கள்

எனக் கண்டுகொண்டேன் - இல்லை

புரிந்துகொண்டேன்.



நான் மரண வாசலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நோயாளி

இன்றோ நாளையோ தெரியல.....

என் அருகில்

எனக்கான பிரார்த்தனையில் ....

கண்ணீரோடு துயரத்தில் ஏன் உறவுகள் ...

அவர்களை தேற்ற என்னால் முடியவில்லை ....

காலம் அவர்களைத் தேற்றும்...

காலம் அவர்களைத் தேற்றும்!!

எழுதியவர் : (27-Nov-13, 8:13 pm)
பார்வை : 85

மேலே