கறுப்பு மனம்

“கூவும் குயில் நீயே
என் கண்ணே ” என்றால்
அவளுக்குப் பாலூட்டிய அம்மா ..
“மழை பொழியும் மேகம் நீயே
என் பொன்னே ” என்றார்
அவளுக்கு அறிவூட்டிய அப்பா ..
“குழல் கண்ணனின் சாயல் நீயே
என் அழகே “ என்றான்
அவளுக்குப் பாசத்தையூட்டிய அண்ணன் ..
“மண்ணுக்குள் இருக்கும் வைரம் நீயே
என் அறிவே ” என்றார்
அவளுக்கு வழிகாட்டிய ஆசிரியர் ..
“ஒபாமாவின் உடன்பிறப்பு நீயே
என் தோழியே ” என்றனர்
அவளுக்கு இனிய நட்பை காட்டிய தோழர்கள் ..
ஆனால் ,
“இந்தப் பெண் எனக்கு வேண்டாம்
இவளின் நிறம் கறுப்பு ” என்றார்
அவளின் வெள்ளை மனம் அறியாத மாப்பிள்ளை ..
எப்படி புரிய வைப்பது ??
“மின்னுவதெல்லாம் பொன்னல்ல –
வெளிப்புறத்தில் மட்டும்
மின்னுபவரெல்லாம் பெண்ணல்ல ” என்று
அவர் போன்ற "கறுப்பு மனம்" படைத்தவர்களுக்கு !!!!!