வெற்றி என்பது

கருமை நிறம் என்று நினைத்து
கருணை உள்ளத்தை மறைத்து
வேர் இல்லா மரத்தை வளர்த்து
உன்னை நீ இழந்தாயே

இரண்டு கால் இல்லா குருடனுக்கு
மூன்று சக்கரம் உதவ
வாழ்க்கை படிக்கட்டு ஜொலித்தது

தோல்வி என்று கூட தெரியாத உனக்கு
வறுமை இல்லா வாழ்வை கொண்ட உனக்கு
காரணம் அறியாமல் சிரிக்கும் உனக்கு
ஏன் இந்த தாயக்கம் ?

இது தான் உலகம்
இவர்கள் தான் எம் மக்கள்
நான் கண்ட பொக்கிஷம் புதிதல்ல

ஏன் பிறந்தேன் ? நான் ஏன் பிறந்தேன்??
என்று கேட்பது மனது அல்ல
உன் அறிவின் கழிவு
அளவுக்கு மீறிய சிரிப்பின் சத்தத்தில்
கேட்பது உன் அழுகையின் வலி
வெளியே வா… உலகம் வேறு

காலையில் எழும் குருடனுக்கு
வெயிலின் நிறம் தெரியாது
பிச்சை கேட்கும் செவிடனுக்கு
நாணயத்தின் ஓலி கேட்காது

கைகள் இல்லா குழந்தைக்கு
தாயின் தேகம் அறியாது
கால்கள் இல்லா முதலாளிக்கு
பூமியின் ஈரம் உணராது
நம்மை படைத்த கடவுளுக்கு தெரியுமா
நாம் சிவப்பா, கருப்பா, குள்ளமா, ஊனமா,
அவனிடம் பணம் இருக்குமா
இல்லை பிச்சை தான் எடுப்பானா என்னவென்று

நம் எழுத்து ஆண்டவனிடம் இல்லை
நம் உள்ளத்தில் உள்ளது
அதை கேட்டப்பார்
நம் வெற்றியின் வழி
மோகத்தில் இல்லை தேகத்தில் இல்லை
எண்ணத்தில் உள்ளது என்று கூறும்

சிவப்பு கருப்பு நம் வெற்றியின் கொடி
உயரம் குள்ளம் நம் வெற்றியின் அளவு என்று நினைத்து உழை

ஊனத்தை உள்ளத்தில்வை
வாழ்க்கையை வானத்தில்வை
வெற்றி என்பது வண்ணத்தில் இல்லை
எண்ணத்தில் உள்ளது
உரக்கச் சொல் உலகிற்க்கு
சாதிக்க பிறந்தவன் என்று ..

எழுதியவர் : கண்மணி (29-Nov-13, 5:30 pm)
Tanglish : vettri enbathu
பார்வை : 519

மேலே