நினைப்பது நிறைவேறும்

துளையிட்ட போதிலும் தன்
நிலை இழக்க வில்லை - எழில்
கலைப் பொருளாய் மாறியே மூங்கில்
கருத்துடனே இசைத்தது........!

உளி உடைத்த போதிலும் கல்
உணர்வில் சாகவில்லை - அது
உயர்ந்த கடவுள் உருவிலே மனிதர்
உளம்தனிலே வாழ்ந்தது.......!

வருத்தங்கள் என்பதெல்லாம்
வந்து செல்வது நண்பனே....!
நம்பிக்கை நமக்கிருந்தால்
நடப்பதெல்லாம் நன்மையே....!

இருந்துவிடு மூங்கில் என
இசைத்திருக்கும் வாழ்க்கையே
இழந்துவிடு கவலைகளை
இனி உனக்கு மகிழ்ச்சியே....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (29-Nov-13, 5:19 pm)
பார்வை : 141

மேலே