பயணமாய் போன என் காதல்

கண்டோம், கதைத்தோம், சந்தித்தோம், பழகினோம், நட்புறவானோம்..
உறவுகளாய் இணைந்தோம், சிந்தித்தோம், காதலரானோம், சிறகடித்துப்பறந்தோம்.....
சில கழுகுகளின் பார்வையிலும் தப்பித்தோம்... எதிர்காலமதை திட்டமிட்டோம், இனிமையாய் ஒரு வாழ்க்கை (யாருமே வாழ்ந்திடாத வகையில்) வாழலாம் என எம்மனததிலே விதைபோட்டோம்.... விதையதும் முளைத்தது, செடியது தலைகாட்டியது, பூவதும் பூர்த்தது... வண்டுகளின் கண்களிலும் அப்பூ பட்டது....
என்னாச்சிது.... என்னாச்சு..... யாதொரு பிழையும் இல்லை... தேவையதை உணர்ந்து விரல் வீக்கத்திற்கேற்ப எல்லாம் செய்தேன்...
செடியது... காதல் செடியது பூவில்லாமல் ஏங்கி தலை சாய்ந்ததே.....
வாடி நிற்கின்றேன் செடியை வளர்க்கமுடியாத பாவியாக..... யாரும் இல்லை.... ஆறுதல் சொல்லக்கூட.....
உன்னைப்போல் யாரும் இல்லை... என்னை ஆற்றுப்படுத்த... அரவணைக்க....

எழுதியவர் : த.சேகரன் (29-Nov-13, 11:23 pm)
பார்வை : 67

மேலே