போதும் நிறுத்திவிடு
தாயை போல
அரவனைக்க யாருமில்லை
நமக்கு ......
புனிதமான கருவறையை
எட்டி உதைத்தாய்
வெளியே வீசப்பட்டாய் ....
இயற்கையை போல
ஒரு நண்பன் நமக்கு இல்லை !
நம்மை போல இயற்க்கைக்கு
ஒரு எதிரி இல்லை !
இயற்கையை எட்டி உதைத்தது
போதும் நிறுத்திவிடு ......
இல்லையெனில் அடுத்து
நீ எங்கே விசப்படுவாயோ
என்று நினைத்தால் எனக்கு
பயமாக உள்ளது ...
போதும் எனக்காக நிறுத்திவிடு ........