ஈழ தமிழம்மா

தமிழம்மா தமிழம்மா ஈழதமிழம்மா
இன்னும் எத்தனை நாள்
இந்த துன்பம் நீயே சொல்லம்மா

உந்தன் தோழி கடல்கள்
இங்கே கொஞ்சம் பொங்கிவராதோ
இந்த பாவிகளை அழித்துவிட்டு
போககூடாதோ

(தமிழம்மா தமிழம்மா............)

நரிகள்கூட மார்புதட்டும் சத்தம்கேக்குதே
இதை கேட்டபின்பும்
புலிகள் நெஞ்சம் பதுங்கியிருக்குமா?

உலகுக்கே நாகரிகம் கற்று தந்தோமே
உணவுக்காக கையேந்தும் நிலையே
இன்று கொண்டோமே

(தமிழம்மா தமிழம்மா............)

ஏழரைகோடி சொந்தம் கொண்ட ஈழதமிழம்மா
அனாதையாக இன்று நீ
ஆனது ஏனம்மா ?

ஆயுதத்தால் அமைதியை கட்டும்தேசமே
எங்கள் லச்சியத்தால்
அழிந்துபோகும் உங்கள் தேசமே

ஆழ்கடல் மத்தியிலே என்இனத்தின்
அழுகுரல் கேக்குதையா
அது தாயை பிரிந்த சேயாய் கதறுதையா

வீழ்ந்துபோனோம் என்று
வீண் கனவும் காணாதே அவையாவும்
விதைகள் நீ மறந்துபோகதே

படைக்காமல் ஓயமாட்டோம்
புது ஈழதேசமே
பகைவனே நீ ஓடிவிடு
இது லச்சியதேசமே

தமிழம்மா தமிழம்மா ஈழதமிழம்மா
இன்னும் எத்தனை நாள்
இந்த துன்பம் நீயே சொல்லம்மா

உந்தன் தோழி கடல்கள்
இங்கே கொஞ்சம் பொங்கிவராதோ
இந்த பாவிகளை அழித்துவிட்டு
போககூடாதோ

(தமிழம்மா தமிழம்மா............)

எழுதியவர் : aathi (30-Nov-13, 1:29 pm)
பார்வை : 151

மேலே