+உனக்காய் இதயம் கெஞ்சும்+

காயமானதே நெஞ்சம்
மருந்திடுவாயோ கொஞ்சம்

வேண்டாமுனக்கு வஞ்சம்
தந்திடுவாயோ தஞ்சம்

இதயமுனக்கோ பஞ்சம்
என்னவேண்டுமடி லஞ்சம்

காதலில்வேண்டாம் கஞ்சம்
உன்னால்கனக்குதடி பஞ்சும்

உனக்காய்இதயம் கெஞ்சும்
கண்டால்ஏனோ அஞ்சும்

கூர்மையில்வாளையும் மிஞ்சும்
உன்கண்களில் எதற்குநஞ்சும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Dec-13, 9:03 pm)
பார்வை : 111

மேலே