அழகுதேவதை
உன் இதழ் தழுவிடும்
தேநீரும் தேனாகும்!
திரவ விதிகள் தூளாகும்!
உன் ஊன் சேர்ந்திடும் ஊணும்
பொற்கடல் கலந்திடும்!
ரசவாதம் நடந்திடும்!
-----------------------------
பொறியியல் படித்திடும் புன்னகையே!
சோகத்தின் சுவடுகள் உன்முகம் தேடி
நுண்நோக்கியும் கூட நொடிந்தே விட்டது!
கவலையும் உன்மனம் குடியெறா கவலையில்
நடைபாதை ஓரம் நலிந்தே செத்தது!
----------------------------------------
மழையில் தலை குளித்து
தளியாய் தரை நனைக்கும்
தளிர் மரங்களின் நிர்வாணம்!
உன் சிரிப்பின் உருவகம்!
-----------------------------------------
அவள் விழிகள்!
பிரபஞ்சத்தின் முழுஇருளைத் தன்
கருமணிகளிள் சுமக்கும் முடிவிலிகள்!
-------------------------------------------
வளவளவென்று பேசும் விழியே!
உன்மௌனம்கூட சுகமான வலியே!
-----------------------------------------
அவள் சுவாசம் பட்ட கார்முகிலாய்
என் மனதிற்குள் மழைத்துளிகள் !
துளிர்விட்ட காதலோ மணித்துளிகளில் மரமாக!
---------------------------------