மரம்

நின்ற போது நிழலானேன்
வீழ்ந்த போது விறகானேன்
வீடுகளுக்கு நிலவானேன்
விலை பேசும் பொருளானேன்
அனைப்பதற்கு ஆள் இல்லை
அறுப்பதற்கு ஆள் உண்டு - என்
அங்கத்தை பிளந்து
அழகான பொருள் செய்து
அனைவரும் அனுபவிப்பர் - நான்
அழுது புலம்புவதும்
அய்யோ என கதறுவதும்
அகிலத்தின் காதுகளில் சென்று
அடைந்ததே இல்லை
வெட்டுங்கள் - உங்கள்
விருப்பம் போல் வெட்டுங்கள்
வெற்று பூமியாய்
விதவை கோலமாய் மாறிட - நாங்கள்
வீழும் வரை வெட்டுங்கள்
விடியல் என்ன இருள் என்ன
வெட்டி வெட்டி தள்ளுங்கள்.

எழுதியவர் : கொங்கு தும்பி (3-Dec-13, 12:40 pm)
Tanglish : maram
பார்வை : 168

மேலே